லாபமென்ன உனக்கு லாபமென்ன
429.
பல்லவி
லாபமென்ன உனக்கு லாபமென்ன-நீ
லோகம் முழுவதும்
ஆதாயப்படுத்தினாலும்
ஜீவனை
இழந்து விட்டால்-நித்ய
சரணங்கள்
1. சாபமுதலை நீ சேர்த்துக் குவிக்கின்றாய்
பாவ
இன்பங்களைப் பால் போல் பருகுகின்றாய்
தேவ
கோபத்தையோ தேடியடைகின்றாய்
ஜீவனையோ நீ சேதம் செய்கின்றாய் - லாப
2. உன்னையே
நீ முற்றும் உகந்து காப்பாயோ
உன்னுடைமைகளையே உவந்து சேர்ப்பாயோ
அன்பர்களையெல்லாம் அகற்றி விடாயோ
அன்பர்
கோமானை நீ அண்டிக் கொள்ளாயோ
- லாப
Comments
Post a Comment