09 December 2025

வல்ல ஆவியே தூய ஆவியே

வல்ல ஆவியே தூய ஆவியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          வல்ல ஆவியே தூய ஆவியே

          உமக்கே ஸ்தோத்திரம் ஐயா

            கோடி நன்மைகள் எனக்கு செய்தீர்

            நன்றி நன்றி ஐயா

            கன்மலை மேல் நிறுத்தி வைத்தீர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            துன்ப நேரத்தில் என் ஆறுதல் ஆனீர்

            நன்றி நன்றி ஐயா

 

                        நன்றி ராஜா 4 நன்றி தகப்பனே

 

1.         உம் கண் இமைக்குள் மூடி வைத்தீர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            என் கண்ணீரை துடைத்து விட்டீர்

            நன்றி நன்றி ராஜா

            உம் உள்ளங் கையில் என்னை வவரைந்து வைத்தீர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            உம் இதயத்தினுள் வாழ வைத்தீர்

            நன்றி நன்றி ராஜா - நன்றி

 

2.         மான் கால்களை எனக்கு தந்தீர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            பெலவீனத்தில் பெலனானீர்

            நன்றி நன்றி ஐயா

            நான் இடறும் போது தாங்கினீரே

            ஸ்தோத்தரம் ஸ்தோத்திரம் ஐயா

            வியாதி நேரத்தில் குணம் தந்தீர்

            நன்றி நன்றி ஐயா - நன்றி

 

3.         உம் கரத்தில் அடைக்கலம் தந்தீர்

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            பரலோகத்தை திறந்து தந்தீர்

            நன்றி நன்றி ஐயா

            நான் கலங்கும் போது தாங்கினீரே

            ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஐயா

            ஜெப வேளையில் பதில் தந்தீரே

            நன்றி நன்றி ஐயா

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...