வழியும்
நீரே ஒளியும் நீரே
ஜீவனும் நீரே தேவனும் நீரே
- 2
நம்பி வந்தேன் நாயகன் இயேசுவே
என்றும் எந்தனின்
துணை நீரே - 2 - வழியும்
1. நானே வழியும் சத்தியம் ஜீவன்
என்று உரைத்த எந்தன் இயேசுவே - 2
மனதின் இருளை போக்கிட வந்த
மகிமை நிறைந்த தேவ தேவனே - 2 - வழியும்
2. மாநிலம் போற்றும் மங்கிடா
ஜோதி
மன்னவர் இயேசுவே மறைபொருள் ஞானமே - 2
எங்கும் நிறைந்த என் அரும் செல்வமே
எந்தன் மேன்மை இயேசு தேவனே - 2 - வழியும்
3. உந்தன் வாக்கு எந்தனின் தீபம்
என்னை தந்துமே உம்மை சாருவேன் - 2
உந்தனின் பாதை என்றும் செல்லுவேன்
நித்திய ராஜனே இயேசு தேவனே - 2 - வழியும்
4. மகிமை தங்கும் உந்தன் சமூகம்
என்றும் என்னை தேற்றி ஆற்றுதே - 2
கலங்காமல் பதறாமல்
உந்தன் பாதை என்றும் செல்லுவேன் - 2 -
வழியும்
YouTube Link
No comments:
Post a Comment