14 May 2018

ஆனீரோ பாலகனே ஆதிபனே ஆனீரோ

கைப்பிரதி:6

To Download Txt Lyrics file

 

6          இராகம் (திரியேகா மரியோவா)

 

1.       ஆனீரோ பாலகனே ஆதிபனே ஆனீரோ

            சீராரும் கண்மணியே தேடரிய பரன் திருமுதலாய்

 

2.         தீர்க்கருரைத்தபடி தாவீதின் ஊர்தனிலே

            மார்க்கமாய் மரியாளின் மைந்தனாக வந்தீரோ

 

3.         மகிமையின் ராஜான் திருமடியை விட்டு இந்த

            மாடடையும் கொட்டிலிலே வந்தாயோ பரன் திருமுதலாய்

 

4.         முன்னோர்கள் வாஞ்சித்த முன்னவனே முதலோனே

            மன்னன் தாவீது குலமாவேந்தே பரன் திருமுதலாய்

 

5.         வரைதிரை பூபடைத்த வாழ்பிதாவின் திருமடியில்

            வரிசையுடன் சொகுசாக வாழ்ந்தாயோ பரன் திருமுதலாய்

 

6.         ஆதிமனுடர் செய்த அரிய பாவம் போக்க இந்த

            பூதலத்தில் பாலகனாய் பிறந்தாயோ பரன் திருமுதலாய்

 

7.         ஆதிபிதாச்சுதன் ஆவி திரியேகர்க்கும்

            அன்றின்றும் என்றென்றும் அல்லேலூயா துதிதோத்திரமே

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...