09 April 2024

தண்ணீர்கள் கடக்கும் போது

தண்ணீர்கள் கடக்கும் போது

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    தண்ணீர்கள் கடக்கும் போது

                        என்னோடு இருக்கின்றீர்

                        அக்கினியில் நடக்கும் போது

                        கூடவே வருகின்றீர்

                        மூழ்கிப் போவதில்லை - நான்

                        எரிந்து போவதில்லை (2)

1.         என் மேல் அன்பு கூர்ந்து

            எனக்காய் இரத்தம் சிந்தி

            என் பாவம் கழுவி விட்டீரே

            எனக்கு விடுதலை தந்து விட்டீரே

 

                        நன்றி ஐயா நன்றி ஐயா

2.         உமது பார்வையிலே

            விலையேறப் பெற்றவன்(ள்) நான்

            மதிப்பிற்கு உரியவன் நானே... இன்று

            மகிழ்வுடன் நடனமாடுவேன்

3.         பாலைவன வாழ்க்கையிலே

            பாதைகள் காணச் செய்தீர்

            ஆறுகள் ஓடச் செய்தீரே - தினம்

            ஆபத்திலே பாடி மகிழச்செய்தீரே

4.         பெற்ற தாய் தனது

            பிள்ளையை மறந்தாலும்

            நீர் என்னை மறப்பதில்லையே - உமது

            உள்ளங்கையில் பொறித்து வைத்துள்ளீர்

5.         என்னை படைத்தவரே

            உருவாக்கி மகிழ்ந்தவரே

            பெயர் சொல்லி அழைத்துக் கொண்டீரே

            உமக்கு உரிமையாக்கிக் கொண்டீரே

6.         என்னை மீட்கும்படி

            தன்னை பலியாக்கினீர்

            எனக்குள்வந்து விட்டீரே

            (என்னை) ஆட்கொண்டு நடத்திச்செல்வீரே

 

https://www.youtube.com/watch?v=J5cnekcAlyA

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...