18 April 2024

தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே

தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே

            தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்

            தாவீதின் ஊரில் நம் இயேசு பிறந்தாரே

            தம் திருப்பாதம் தொழுகை செய்குவோம்

 

                        தேவன் மனிதனின் ரூபத்தில் வந்தார்

                        தூதர் திரள் சேனை துதிகள் பாட

                        எல்லா ஜனத்திற்கும் மா சந்தோஷமே

                        எங்கும் ஓர் நற்செய்தியே

 

                        எங்கும் ஓர் நற்செய்தியே

 

1.         பரிசுத்தாவி செயலினாலே

            பரன் பூவில் அவதரித்தார்

            மண்ணான சாயல் தரிக்கும் இயேசு

            மாறாதவர் தம் வல்லமையில் - தாவீதின்

 

2.         புனிதனாக மனிதன் மாறி

            புது சிருஷ்டி ஆகிடவே

            இழந்துபோன ஜனத்தைத் தேட

            இரட்சகரே வந்தார் பூவிலே - தாவீதின்

 

3.         குறைபெறாத தேவக்குமாரன்

            ஒளிப்பிதாவின் அன்பளிப்பே

            பெற்றுக்கொண்டோம் நாம் கெட்டுப்போகாமல்

            பரமனின் நித்திய ஜீவனே - தாவீதின்

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=URk3qk9UVYQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...