19 April 2024

திராட்சை செடியே இயேசு ராஜா

பெர்க்மான்சு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   திராட்சை செடியே இயேசு ராஜா

                        உம்மோடு இணைந்திருக்கும் கிளை நாங்கள்

                        உமக்காய் படருகின்ற கொடி நாங்கள்

                        திராட்சை செடியே இயேசு ராஜா

1.         பசும்புல் மேய்ச்சலிலே நடத்திச் செல்பவரே

            பரிசுத்தமானவரே - ஐயா - 2

            உள்ளமே மகிழுதையா உம்மோடு இருப்பதனால் (2)

            கள்ளம் நீங்குதையா - எனக்கு (2)

2.         குயவன் கையில் உள்ள களிமண் நாங்கள்

            ஏந்தி வனைந்திடுமே - ஐயா - 2

            சித்தம் போல் உருவாக்கும் சுத்தமாய் உருமாற்றும் (2)

            நித்தம் உம் கரத்தில் - நாங்கள் (2)

3.         வார்த்தையில் நிலைத்திருந்து தினமும்

            கனி கொடுக்கும் சீடர்கள் நாங்கள் - ஐயா - 2

            வேத்தை ஏந்துகின்றோம் வாசித்து மகிழுகின்றோம் (2)

            தியானம் செய்கின்றோம் - நாங்கள் (2)

 

- பெர்க்மான்ஸ்

 

https://www.youtube.com/watch?v=F2wr0225PlY

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...