26 April 2024

துதி துதி துதி துதி என் மனமே

துதி துதி துதி துதி என் மனமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          துதி துதி துதி துதி என் மனமே

            துள்ளி துள்ளி துள்ளி துள்ளி பொங்கு உள்ளமே

 

                        ஆத்துமாவின் நேசராம் இயேசுவை பாடு

                        அளவில்லா ஆனந்தம் கொண்டு ஆடிடு

 

1.         பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரை

            தரிசித்து தரிசித்து மகிழலாம் வா - 2

            வாக்குகளை பற்றிக் கொண்டு பாதம் ஓடி வா

            வருஷத்தை நன்மையினால் முடி சூட்டுவார் - 2

 

2.         யெகோவா ராபாவில் சுகமாய் இரு

            யெகோவா நிசியினால் வெற்றி முழங்கு - 2

            யொகோவாயீரேவால் நிறைவாய் இரு

            யெகோவா ஷம்மாவினால் நிரம்பி வழி - 2

 

3.         கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

            இரக்கமும் உருக்கமும் மிகுந்தவரே - 2

            எனக்காக சிலுவையில் மரித்தவரே

            உயிர்த்தெழுந்த வல்லமையால் நிரப்புகிறீர் - 2

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...