திருநெல்வேலி திருமண்டல பெண்களே

திருநெல்வேலி திருமண்டல பெண்களே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          திருநெல்வேலி திருமண்டல பெண்களே

            நீங்க உற்சாகமாய் ஊழியத்தை செய்யுங்க

            திருமண்டல பெண்கள் ஐக்கிய சங்கமே

            நீங்க தைரியமாய் ஊழியத்தை செய்யுங்க

 

                        நீங்க பயப்படாதீங்க நீங்க கலங்கீடாதிங்க

                        இயேசு நம்மோடு இருக்கிறாருங்க

                        நீங்க ஜெபம் பண்ணுங்க நீங்க விசுவாசிங்க

                        இயேசு நம்மோடு இருக்கிறாருங்க

 

1.         குளோரிந்தாள் அம்மா போல நீங்களும்

            பயப்படாமல் ஊழியத்தை செய்யுங்க

            சாராள் டக்கர் அம்மா போலவே நீங்க

            ஏழைகள் கல்வி கற்க உதவுங்க - நீங்க பயப்படாதீங்க

 

2.         தொற்காள் பெண்ணைப் போல நீங்களும்

            உற்சாகமாய் தானதர்மம் செய்யுங்க

            தெபோராள் பெண்ணைப் போல நீங்களும்

            தைரியமாய் நீதிநியாயம் செய்யுங்க - நீங்க பயப்படாதீங்க

 

3.         அன்னாள் பெண்ணைப் போல நீங்களும்

            இடைவிடாமல் ஜெபங்களை செய்யுங்க

            ஐடா ஸ்கடர் அம்மா போலவே நீங்க

            மருத்துவ ஊழியத்தை செய்யுங்க - நீங்க பயப்படாதீங்க

 

4.         எஸ்தர் ராஜாத்தியை போலவே நீங்க

            தேசத்திற்காய் செயல்படுங்க

            உபவாசம் இருந்து ஜெபித்து நீங்க

            ஜெயத்தைப் பெற்றுக் கொள்ளுங்க - நீங்க பயப்படாதீங்க

 

5.         திருநெல்வேலி திருமண்டலம் வளரவே நீங்க

            ஆத்தும ஆதாயம் செய்யுங்க

            ஊழியம் செய்திடும் சபைகளை

            நம் இயேசு ஆசீர்வதிப்பார் - நீங்க பயப்படாதீங்க

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு