29 April 2024

துதிகள் செலுத்தி போற்றியே

துதிகள் செலுத்தி போற்றியே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          துதிகள் செலுத்தி போற்றியே

            தூயவர் புகழ் பாடுங்கள்

            மகிமைக்கு பாத்திரர் இயேசுவை

            மனதார தினம் வாழ்த்துங்கள்

 

                        அவர் அதிசயமானவர் அகிலம் படைத்தவர்

                        வானிலும் பூமியிலும் மேலானவர்

 

1.         யோர்த்தானின் பெரு வெள்ளத்தில்

            நம்மை காத்து நடத்தினவர்

            பாசானின் எருதுகளை

            தம் பலத்தினால் துரத்தினவர்

            சேனைகளின் கர்த்தர் பெரியவரே

            யுத்தத்தில் வல்லவரே

            அவர் கிருபை உயர்ந்தது

            அவர் மகிமை பெரியது

            வானிலும் பூமியிலும் மேலானவர்

 

2.         சோதனை பெலவீனத்தில்

            நம்மை தூக்கி நிறுத்தினவர்

            ஆவியில் பெலனளித்து

            நம்மை ஆற்றி தேற்றினவர்

            ஆதியும் அந்தமும் ஆனவரே

            ஆசீர்வதித்தவரே

            அவர் இரக்கம் மிகுந்தவர்

            நம் இதயம் வாழ்பவர்

            வானிலும் பூமியிலும் மேலானவர்

 

3.         சகலமும் படைத்திட்டவர்

            சத்திய வழியானவர்

            சாத்தானின் விலங்கொடித்து

            நம்மை நித்தியம் சேர்க்கிறவர்

            வாழ்விலும் தாழ்விலும் துணை வருவார்

            வாதைகள் போக்கிடுவார்

            அவர் மகிமை நிறைந்தவர்

            அவர் மகத்துவம் மிகுந்தவர்

            வானிலும் பூமியிலும் மேலானவர்

 

https://www.youtube.com/watch?v=MINq9p7vWrA

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...