தீய பாவக் கேட்டை நீக்குமே திருச் சபை யோரே

தீய பாவக் கேட்டை நீக்குமே திருச் சபை யோரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

93. இராகம்: காமாசு.                                                                                                                 தாளம்: ரூபகம்.

 

                                                பரிசுத்த யாக்கோபு திருநாள் - சூலை 25ஆம் நாள்

 

                   “நீ யுனக்குச் சொந்த மல்லவே” - என்ற மெட்டு

 

                             பல்லவி

 

          தீய பாவக் கேட்டை நீக்குமே-திருச் சபை யோரே

          தீய பாவக் கேட்டை நீக்குமே.

 

                             அனுபல்லவி

 

            தீய பாவக் கேட்டை நீக்கும், ரீ-ரீ-ரீ-ரீ

            செபித்துக் கர்த்தரின் வசனம் நோக்கும் - தீய

 

                             சரணங்கள்

 

1.         பெரிய யாக்கோப் திருநாள் தானிது - பிர பல மீட்பர்

            பொவனர்க் கேசென் றழைத்த பேரிது

            அரிய கலிலே யோவான் அண்ணன் ரீ-ரீ-ரீ-ரீ

            அந்தச் செபதே யுகந்த மகன்தான் - தீய

 

2.         தயவு டன்மேசி யாவுங் கூப்பிட - ஒரு தடையு மின்றி

            தந்தை யும்ப டகும் விட்டிட

            பயமு டனந்த அன்னை சாலோமி ரீ-ரீ-ரீ-ரீ

            பத்தி யுடனே அனுப்பி விட்டனள் - தீய

 

3.         இரண்டு மக்களைக் கொண்டு வந்தனள் - கிறிஸ்தேசு முன்பு

            தொண்ட னிட்டவள் கேட்டுக் கொண்டனள்

            உம்பர் இராச்சியம் தன்னிலிருக்க ரீ-ரீ-ரீ-ரீ

            ஒருவன் வலமும் ஒருவன் இடமும் - தீய

 

4.         திருமந் திரமும் தெரிந்திலை யென்றார்-நம தருமை ரட்சகர்

            தேவ சித்தமோ அறிந்திலை யென்றார்

            மறுவு லகின் மேன்மை யனைத்தும் ரீ-ரீ-ரீ-ரீ

            மனுடர் விருப்பப் படிந டக்குமோ - தீய

 

5.         மூவிசேட சமய மானதில் - யாக் கோபி ருக்க

            முதன்மைச் சீடர் மூவர் நடுவதில்

            யவீரு வீட்டில் தாபோர் மலையில் ரீ-ரீ-ரீ-ரீ

            எருச லையுடன் கெதுச மனையில் - தீய

 

6.         துட்ட ஏரோது அகிரிப் பாவினால் - யாக்கோபு மரிக்க

            துரோக யூதர் தானும் ஏவினார்

            குற்றம் சாட்டிய உத்தி யோகனும் ரீ-ரீ-ரீ-ரீ

            குணப்பட் டுடனே கொல்லப் பட்டனன் - தீய

 

7.         வைராக்கிய ஆவி யுள்ளவன் - இவன் சரிதை முழுதும்

            மார்க்க வீரம் தாக்கும் வாக்குள் ளோன்

            தைரி யத்துடன் சாட்சி சொல்லுவீர் ரீ-ரீ-ரீ-ரீ

            தகுந்த பதவி அடைந்து கொள்ளுவீர் - தீய

 

          - S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு