திவ்ய சபையை நாட்டுவாய்

திவ்ய சபையை நாட்டுவாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

282. இராகம்: தேசிகதோடி              ஆதி தாளம் (456)

 

                             பல்லவி

 

          திவ்ய சபையை நாட்டுவாய், தேவா, யெகோவா, தேவா;

 

                             சரணங்கள்

 

1.         திவ்ய சபையை, நாட்டி;-ஒரு

            திரளாய் நரரைக்[1] கூட்டி,-அவர்

            உய்யும் வழியைக் காட்டி,-உன்றன்

            உச்சித அருளை யூட்டி-தேவா - திவ்ய

 

2.         பொய்யாம் மதங்கள் மாழ-ஆதிப்

            பொல்லாச் சாத்தானும் வீழ-நரர்

            ஐயாவென்றுன் முன்னே தாழ-சுத்த

            அண்டர்கள்[2] வந்து சூழ-தேவா - திவ்ய

 

3.         சண்டை சல்லிய மோய, நல்ல

            சமாதான வாரி[3] பாய,-கொடுந்

            தண்டராச்சியங்கள்[4] சாய-ஞாலஞ்

            சந்தத முன்புக ழாய-தேவா - திவ்ய

 

- டி. அருளானந்தம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] மானிடர்

[2] வானோர்

[3] கடல்

[4] கொடுங்கோல் அரசுகள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு