துணை என்றும் இயேசு தேவா

துணை என்றும் இயேசு தேவா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துணை என்றும் இயேசு தேவா

                   உம்மை நம்பினேன்

                        எம்மைக்காரும் தேவ மைந்தா

                        உம்மைச் சாருவேன்

 

1.         இருள் யாவும் நீக்கி எம்மில் அருள் யாவும் தந்தீர் தேவா

            கனிவாக வந்தீரே துணையாக நின்றீரே

            தேவ தேவன் இயேசுவே அன்பு போதுமே

 

2.         எனக்காக யாவும் செய்யும் பலமுள்ள தேவன் நீரே

            விளக்கினை ஏற்றுவீர் அபிஷேகம் பண்ணுவீர்

            எந்தன் கொம்பு உயர்ந்திடும் நம்பும் தேவனே

 

3.         அலை போல பாயும் துன்பம்

            கடல் போல சீறும் காற்றோ

            இரையாதே என்றீரே அமைதலை தந்தீரே

            வார்த்தை ஒன்று சொல்லுமே வல்ல தேவனே

 

4.         பயந்திடும் யாவர் மீதும் நன்மையை பொழியும் நாதா

            நம்பினேன் உம்மையே நன்மையே ஈந்திடுமே

            நீதிமானின் தேவனே நித்தம் நடத்துமே

 

5.         வழி என்றும் காட்டும் தேவா விழி என்னில் வைத்த மூவா

            தினம் தினம் போதியும் அருள் நிதம் காட்டிடும்

            உம்மைப் போல் தெய்வத்தை பூவில் கானேன் நான்

 

 

 

https://www.youtube.com/watch?v=FHHIggSQpdI

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு