தாகம் கொண்டனரே எருசலை

தாகம் கொண்டனரே எருசலை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

85. இராகம்: யமுனா கல்யாணி.                                                                                 தாளம்: ஆதி.

 

                                                பரி. கன்னிமரியாள் சுத்திகரிப்புத் திருநாள் - பிப்ருவரி 2ஆம் நாள்

 

                             “பாதம் வந்தனமே” - என்ற மெட்டு

 

                             பல்லவி

                  

                   தாகம் கொண்டனரே - எருசலை

                   யாகம் கண்டனரே

 

                             சரணங்கள்

 

1.         வேகமுடனே கன்னிமாதா விரைந்து சென்றனரே

            பாலகனுடனே தேவாலயமே - பலியிட - தாகம்

 

2.         பிரதிஷ்ட்டையின் பெரிய திருநாள் பிரபல மோங்க

            மரியன்னையும், மனு மகனும் - தொழுதிட - தாகம்

 

3.         சென்மப் பாவமும் கன்மப் பாவமும் சிறிது மில்லாத

            சிசுவுடனே, புறாவுடனே - பலியிட - தாகம்

 

4.         மாது மரியாள் தாயும் அன்னாள் தந்தை யோயாக்கீம்

            மகிழ்ந்திடவே, களித்திடவே - துதிசெய - தாகம்

 

5.         கேன்டில்-மாஸ்-டே, தோன்றவே ஒளி,கிளம்பி சொலித்திட

            கீர்த்தியுடனே, பூர்த்தியுடனே - பலியிட - தாகம்

 

6.         தேட்டமுடை சீமோன் அன்னாள் தெரிசனம் கண்டார்

            சிரம் பணிந்தார், கரம் விரித்தார்-துதியுடன் - தாகம்

 

7.         பிரசவித்தவன் தோத்திரம் செய்ய, பிள்ளை களிக்க

            பின்னுள்ள பேர், பின் பற்றவே-பணிவுடன் - தாகம்

 

- S. உவால்டர் கவிராயர், தென்மலை.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு