துதி அல்லேலூயா துதி துதி என்றுமே
துதிஅல்லேலூயா
துதி துதி என்றுமே
(2)
நீதி
கர்த்தர் எங்கள்
அதிபதி என்றுமே
(2)
கதி ஜீவ நதியவர்
கருணை கடாட்சிப்பதால்
(2)
துதி
அல்லேலூயா துதி
துதி என்றுமே
(2)
1. அலை நிலை
உலகினில் அடியார்
நம்மை (2)
தொலையாது
துங்கவன்
தம் துணையுமீந்தார்
(2)
விலையுயர்
உதிரங்கொண்டுலகை
மீட்டதினாலே
(2)
துதி அல்லேலூயா
துதி துதி என்றுமே
(2)
2. நித்தம்
நித்தம் பக்தர்
பரிசுத்தமடைய
கர்த்தர்
வாக்குத்தத்தம்
கொண்ட சத்தியமீந்தார்
வித்தகனின்
சித்தப்படி
இத்தரையில்
யுத்தம் செய்ய
வேண்டி
நின்றோம் அல்லேலூயா
துதி என்றுமே
3. பல பல பாடுகள்
பலுகிவரினும்
நிலைபெற
நிமலன் தம்
ஆவியுமீந்தார்
சில காலம்
சிதையுங்கால்
சீர்திருத்தும்படி
நம்மை
செய்பவனுக்-அல்லேலூயா
துதி என்றுமே
4. கறை திறை
குறை நீங்கி கற்புமுள்ள
நிறையுள்ள
மணவாட்டி ஆக்கிக்
கொள்ள
மறையவன்
அறைதனில்
அழைத்தேக
வருவதால்
இயேசுவுக்-அல்லேலூயா
துதி என்றுமே
https://www.youtube.com/watch?v=OINreTYivt0
Comments
Post a Comment