29 April 2024

துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே

துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே

 

1.         புது ஜீவனால் எம்மை

            புதுமையாய் மாற்றி

            திருச்சித்தம் செய்திடவே

            உம் மகிமையின் ஆவியால்

            நிறைந்தே மகிழ மா தயவீந்திடும்

 

2.         கடும் புயல்களிலே கலங்கிடாதெம்மை

            காத்திடும் கர்த்தரவர் - திரு

            கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து

            மனமதை தேற்றினாரே

 

3.         சுத்தர்களுடனே சீர் பொருந்திடவே

            நித்தமும் கிருபை ஈந்தார் - தம்

            ஜீவனை ஈந்து சாவினை ஜெயித்து

            சேயராய் மாற்றினாரே

 

4.         சிலுவை சுமந்தவர் பின் சென்றிடுவோம்

            சேவையும் செய்திடவே - உயர்

            பெலமதை ஈந்து பயமதை நீக்கி

            பறந்திட கிருபை செய்வார்

 

5.         அவர் கிருபை வேளையை

            அனுதினம் நோக்கி

            ஆயத்தமாகிடுவோம் - எம்மை

            அழைத்தவரே கரம் பிடித்தவரே

            என்றும் அன்புடன் நடத்திடுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...