13 April 2024

தாயானவள் தன் பிள்ளைகளை

தாயானவள் தன் பிள்ளைகளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

2653.                     F-Min/4/4/T-140

 

          தாயானவள் தன் பிள்ளைகளை

            மறந்தாலும் வெறுத்தாலும்

            படைத்தவரோ நம்மை என்றும்

            மறப்பதில்லை வெறுப்பதில்லை

 

                        அவர் அன்பின் தெய்வம்

                        நம்மை காக்கும் தெய்வம்

                        இந்த அகிலம் போற்றும்

                        நம் இயேசுவே தெய்வம்

 

1.         கருவினிலே தெரிந்து கொண்டார்

            இறுதிவரை நம்மை நடத்திடுவார்

            கிருபைகளை பொழிந்திடுவார்

            மகிமையிலே நம்மை சேர்த்திடுவார்

 

2.         இஸ்ரவேலே பயப்படாதே

            கர்த்தரே நம் துணையானார்

            வலக்கரத்தை பிடித்துக் கொண்டார்

            வழுவாமல் காத்திடுவார்

 

3.         வானங்களே மகிழ்ந்திடுங்கள்

            நம் வல்லவரை வாழ்த்திடுங்கள்

            திருச்சபையே முழங்கிடுங்கள்

            நம் இயேசுவையே போற்றிடுங்கள்

 

- Pr. R. Reegan Gomez

 

https://www.youtube.com/watch?v=eCQ66hguCxs

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...