பூவுலகில் பூ ஒன்று பூத்ததே
பூவுலகில்
பூ ஒன்று பூத்ததே
நம் வாழ்வு
மலர்ந்திட உதித்ததே
- 2
இந்த
மலரைத் தேடியே
கோடி ஜனங்கள்
வந்தனர் (2)
இதனைப்
பார்த்ததும் சந்தோசம் வந்ததே
(2) - பூவுலகில்
1. உலகின்
ஒளிக் கொடுக்க
வந்த மைந்தனே
உலகின்
ஒளியான எனது மீட்பரே - 2
சமாதான
பிரபு இவர் இவ்வூலகின்
இரட்சகர்
(2)
இவரைப்
பாடி ஆடி போற்றி
நாளும் கொண்டாடுவோம்
(2) - பூவுலகில்
2. பாவம் போக்க
வந்த பரம மைந்தனே
பாவ உலகில்
எனக்காய் வந்தவர்
நீரே - 2
பதினாயிரங்களில்
சிறந்தவர் இவர்
(2)
இவரைப்
பாடி ஆடி போற்றி
நாளும் கொண்டாடுவோம்
(2) - பூவுலகில்
3. சாரோனின்
ராஜாவே லீலி புஷ்பமே
மருதோன்றி
பூங்கொத்தே
வெள்ளைப் பூச்சென்றே
- 2
இவரைப்
போல இங்கு அழகு
யாருமில்லையே
(2)
இவரைப்
பாடி ஆடி போற்றி
நாளும் கொண்டாடுவோம்
(2) - பூவுலகில்
https://www.youtube.com/watch?v=gDKUoBwV5Gs
Comments
Post a Comment