24 April 2024

சிலுவை தனில் உயிர் பிரிய

சிலுவை தனில் உயிர் பிரிய

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

207. இராகம்: ஆகிரி.                                                                                                               தாளம்: ரூபகம்

 

1.       சிலுவை தனில் உயிர் பிரிய திரு மகனார் முகம் நோக்கி

            தேவ அன்னை கூவி யழுதாள் - வெகுவாய், ஆ! ஆ!

 

2.         உலகமதி விருசோரர் நடுவாக மரமீதில்

            உறங்குவதும் சுகமாச்சோ - என் மகனே, ஆ! ஆ!

 

3.         பல பல பேரவமாக பகடியொடு பாராட்ட

            பாங்கதனில் நித்திரை யானீரோ - என் மகனே, ஆ! ஆ!

 

4.         ஐயாயிரவர் பசியை அமர்த்தி அரவணைத்த

            அருட் கைகள் அயர்ந்து சோர்ந்ததுவோ - என் மகனே, ஆ! ஆ!

 

5.         சங்கிலி துரட்டிக் கசைவார் முள் பிரம்படியால்

            சரீர பலவீன மானீரோ - என் மகனே, ஆ! ஆ!

 

https://www.youtube.com/watch?v=3_Ca_VddbE4

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...