வானில் சேரும் சுத்தர் கூட்டம்

வானில் சேரும் சுத்தர் கூட்டம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   வானில் சேரும் சுத்தர் கூட்டம்

                        நாங்களே நாங்களே

                        வெற்றிவாகை சூடும் சேனை

                        நாங்களே நாங்களே - 2

                        நித்திய ஜீவனுக்காக குறித்த எண்ணற்றோர் நாங்களே (2)

                        நித்தம் அல்லேலூயா பாடி துதித்திடும் பாக்கியவான்களே (2)

 

1.         தீயில் நடந்தோம் நோயில் கிடந்தோம்

            இயேசு தூக்கிவிட்டார்

            பேயை ஜெயித்திட மாயை வெறுத்திட

            இயேசப்பா செய்துவிட்டார் - 2

            வெற்றி வாழ்க்கை நடத்துவோம்

            சாட்சி வாழ்க்கை வாழுவோம்- 2

            தேவதயாபரன் தூய நல்லாவியில் ஆளுகை செய்திடுவோம் (2)

            அவருடன் ஆளுகை செய்திடுவோம்

 

2.         ஆயிரமாயிரம் தூதர்கள் சூழ்ந்திட

            இயேசு வருகிறார்

            ஆகாயம் அதிர எக்காளம் முழங்க

            இறங்கி வருகிறார் - 2

            மறுரூபமாகுவோம் மகிமையில் சேருவோம் (2)

            நித்திரை அடைந்த உத்தமர் உயிர்த்த உன்னதம் சேருவோம் (2)

            மீட்பருடன் உன்னதம் சேருவோம்

 

- Rev. Dr. M.T. PAUL RAGHU

 

https://www.youtube.com/watch?v=eINb8QLG3X8

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு