தீய பாவத்தினைவிட் டோடாயோ

தீய பாவத்தினைவிட் டோடாயோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    தீய பாவத்தினைவிட் டோடாயோ?

                        தினமும், யேசு அன்பை நாடாயோ?

 

1.         மா கிருபையாக, ஏகன் அன்பாக

            வந்ததிலையோ, பூவில்

                        உனக்காக? - தீய

 

2.         நாற்பது நாளாய்த் தீப்பசிக் காளாய்

            நாதன் உன் பொருட்டிருந்தார்,

                        கேளாய்? - தீய

 

3.         யூதர்கள் வைய, வேதனை செய்ய,

            உன் பவம் செய்த தவர் உளம்

                        நைய. - தீய

 

4.         சிலுவையில் இறுக்க உலகரும்

                        நொறுக்கச்

            செய்த துன் பவம் மேசியா

                        இறக்க. - தீய

 

5.         அலகை உன் மீது பல வகைத் தீது

            ஆவலுடன் செய்வதால் புவி

                        மீது. - தீய

 

6.         ஐயோ! என் மனமே, வையகம் வனமே;

            அழியா உலகில் அன்புற்

                        றனுதினமே. - தீய

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு