பரனுரைத்த மொழிப்படியே யியைந்து

பரனுரைத்த மொழிப்படியே யியைந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    பரனுரைத்த மொழிப்படியே யியைந்து

                        பண்புடனோர் பேழைதனை

                        வரமிகுத்த நோவை முனி மரத்தின்‌

                        வகையுடனே சேர்ப்பதற்காய்

 

            அத்தியால் புங்குபுளி பூவரசு நெல்லி

            ஆச்சாகருங்காலி குங்குமங்கொன்றை

            யித்தி யகத்தி கடுக்காய சோகு

            ஈந்து பேரீந்து மலைவேம்பு மஞ்சாடி

 

            யுத்த எலும்பிச்சைசீனிநாருத்தை

            யொடையு சிலை மா பலாவெட்பாலை வெள்வேல்

            முத்தின சண்பகஞ் சந்தனங்கோங்கு

            மூங்கில் கூந்தற்பனை தேங்கு சாதிக்காய்

 

            மெத்தனத்தேக்கரசு நறுவிலி தணக்கு

            விளாவாகை பெருநாவல் பாய்மரவிருட்சஞ்

            சித்திரச்சிலை பாலை மாவிலிங் கெட்டி

            தேவதாரி சம்பு நாகை பூவந்தி

 

            பத்திரா ட்சம் வில்லை மாதளை மருதம்வன்னி

            பாதிரி புன்னை மகிள் பன்னீரோடாத்தி

            வித்திலவு முள்ளிலவு வெண்ணோச்சி தேத்தான்

            வேங்கை யிலுப்பை யிலந்தை பனைதான்றி

 

            துத்தியனிச்சைகடம் பொடகில் காயா

            துரிஞ்சு குருந்து சேருந்தி சீவந்தில்

            நெத்துக்களாச்சி கொய்யாவுடன் சீத்தா

            நேர்வாளம் அருநெல்லி பப்பாயி பூகம்

 

            கஸ்தானி யூபிராய் லீபனோன் கேதர்

            காட்டொலிவு நாட்டொலிவுகண்ட மரமெல்லாம்

            எத்தனை விதங்களோ அத்தனையுமாய்ந்தே

            யீதெல்லாங்கப்பலுக்கீடல்லவென்று

 

            கொற்றவனுரைத்தபடி முற்றுமியல்பாகக்

            கோப்பேர் மரங்களை வாய்ப்பாய்க்கொணர்ந்து

            சுத்தத்தறுத்திளைத்தே பலகை சேர்த்துச்

            சூட்சாதி லட்சவித வேலைகளியற்றி

 

            வெற்றியுடன் முந்நூறு முழநீளமாக

            மேலகலமைம்பது முயர முப்பதுமாய்ப்

            புத்தியுயர் சித்திர விதத்துடனமைக்கப்

            பொறைமுனிவன் கப்பல் சரிவர முகிந்துதப்பா - ஏலே

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு