18 April 2024

தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   தாவீதின் வழியினில் மாதாவின் மடியினில்

                        பூவியாள வந்த நிலவே

                        இதழோரச் சிரிப்புடன் இமை மூடும் விழியுடன்

                        மலைமீது மறைகின்றதே

                        உடல் காற்றோடு போராடுதே

                        உயிர் வானோடு உறவாடுதே

                        இது தேவன் பாச மழையே

                        இதில் போகும் பாவக் கரையே

 

1.         மரியாளின் சேயான தேவா, தேவா

            மலைமீது தீதான சாவா

            இருவிழி அழுதிடவே உருகுது மனம்

            இருபது விரல் தொடவே பிறக்குது சுகம்

            உனது எழில் நிழல் தொடவே விரையுது கரம்

            உம் வழி நடந்திடவே கொடுத்திடு வரம்

            தேவா வருவாய், வரமே தருவாய் - தாவீதின்

 

2.         கடல் மீது நடந்தாயே தேவா தேவா
            கல்வாரி பலியானாய் ஏனோ ஏனோ

            முள்முடி அழுத்திடவே கனத்திடும் தலை

            கசையடி விழுந்திடவே கிழிந்திடும் தசை

            குருதியும் வழிந்திடவே நனைந்திடும் உடை

            சிலுவையும் சுமந்திடவே துடித்திடும் உடல்

            நீ ஏன் மரித்தாய், தேவா உரைத்தார் - தாவீதின்

           

- சூர்யதாஸ்

 

https://www.youtube.com/watch?v=E_z6LPVh1sg

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...