26 April 2024

துதிக்கு பாத்திரரே எல்லா

துதிக்கு பாத்திரரே எல்லா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          துதிக்கு பாத்திரரே எல்லா கனத்திற்கும் பாத்திரரே - 2

            மகிமைக்கு பாத்திரரே - (2)

            நீரே என் இயேசுவே - ஓஹோ (2)

 

                        தேவாட்டுக்குட்டியே உம் இரத்தத்தால்

                        மீட்டு கொண்டீரையா - 2

                        புதுப்பாடல் பாடியே போற்றுவேன்

                        எந்தன் கன்மலையே - 2

 

1.         அன்பு கூர்ந்து எனை தேடி வந்தீர்

            பிள்ளையாயென்னை மாற்றி மகிழ்ந்தீர் - 2

            மகிமையும் மாட்சிமையும்

            செலுத்தியே துதித்திடுவோம் - 2 - தேவாட்டுக்குட்டியே

 

2.         இரத்தம் சிந்தி என் பாவம் தீர்த்தீர்

            முள்முடி சூடி என் சாபம் மாற்றினீர் - 2

            வல்லமையும் ஸ்தோத்திரமும்

            செலுத்தியே துதித்திடுவோம் - 2 - தேவாட்டுக்குட்டியே

 

3.         எக்காளம் தொனிக்க மீண்டும் நீர் வருவீர்

            உம்மோடு என்னையும் சேர்த்து கொள்ளுவீர் - 2

            ஐசுவரியமும் கனம் பெலனும்

            செலுத்தியே துதித்திடுவோம் - 2 - தேவாட்டுக்குட்டியே

 

https://www.youtube.com/watch?v=l4r7t0ixrtA

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...