திருவிருந் தருந்திட வாரும்
295.
இராகம்: யமுனாகல்யாணி ஆதி தாளம்
(463)
பல்லவி
திருவிருந்
தருந்திட
வாரும்;-ஏசு
திருச் சடலமது சேரும்
அனுபல்லவி
இருசுகம்[1] தருவார்,
வாரும்;-மிக
இலவசமாயீவார்-இது
சோதனை பாரும்
- திரு
சரணங்கள்
1. இருதயம்
நொறுங்குண்ட
பேர்க்கும்-ஐயோ!
என்
போலுண்டோ
பாவி? யென்போர்க்கும்
மருகித் திகைத்து
மாய்வோர்க்கும்-மா
தேவன்
நின்றழைப்பதைச்
சன்மானிப்போர்க்கும்
- திரு
2. வாதையாம் பாவக்கந்தை
எடுத்து-ஏசு
மகிப னுதிரத்திற்
றோய்த் துடுத்து
நீதியினாடைகள்
தரித்து-நமின்
நேசனின் திருச் சன்னிதானத்தை
யடுத்து - திரு
3. இருதய
தூபகலத்தில்-திட
விசுவாசமெனும்
வர்க்கமிட்டு,
த்யானமெனும்
நெருப்பு மூட்டி-தேவ
ஆசனத்தைய சைக்கத் தகுதியாய்
நீட்டி - திரு
4. விலைகொள்ளாத
திருரத்த
ரசமாம்-விருந்ததில்
மேலவன் மாம்ச போஜனமாம்;
நிலையதாய்ப்
பசி யிலையென்பதாம்-வான
நேச மகாராஜனின்
நித்தியமான அன்பதாம் - திரு
- டி. சுந்தரம்
https://www.youtube.com/watch?v=BptAAiWd4Uw
Comments
Post a Comment