தேடி வந்த அன்பு என் இயேசுவின் அன்பு

தேடி வந்த அன்பு என் இயேசுவின் அன்பு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

          அன்பு என் இயேசுவின் அன்பு

            அன்புக்கு இணையான அன்பு உண்டோ - அந்த

            அன்புக்கு இணையான அன்பு உண்டோ

 

                   தேடி வந்த அன்பு என் இயேசுவின் அன்பு

                        தேடி வந்த அன்பு என்னை தேற்ற அணைக்கும் அன்பு

                        நான் தொலைந்த போதும் விழுந்த போதும் தள்ளாத அன்பு                 

 

1.         நான் உம்மை மறந்த போதும் நீர் என்னை மறக்கவில்லை

            உம் அநாதி சிநேகத்தால் இழுத்துக் கொண்டீரே - 2

            என் சத்துருக்களின் மத்தியில் ஒரு பந்தியை ஆயத்தப் பண்ணினீர்

            புது எண்ணெயால் அபிசேகம் என் சிரசினில் ஊற்றினீரே - 2 - தேடி வந்த

 

2.         காணாமல் போன ஆட்டைப் போல இருந்த என்னை

            தேடி வந்து கரம் பிடித்து தூக்கி எடுத்தீரே - 2

            தூரத்திலே அறிந்த தகப்பன் நீரல்லவோ

            என்னை மார்போடு அணைத்துக் கொண்டு வாழ வைத்தீரே - 2 - தேடி வந்த

 

3.         மனிதர் என்னை தள்ளியும் எத்தன் என்று வர்ணித்தும்

            நாள்தோறும் நிந்தித்தும் என்னை துக்கப்படுத்தியும் - 2

            எப்போதும் எந்நேரமும் என்னை விட்டுக் கொடுக்காமல்

            தாங்கினீர் ஏந்தினீர் என்னைச் சுமந்துக் கொண்டீரே - 2 - தேடி வந்த

                       

- Pr. Mahesh

 

https://www.youtube.com/watch?v=2NXGZZryC4Q

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு