18 April 2024

தாயின் மடியில் குழந்தை போல

தாயின் மடியில் குழந்தை போல

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          தாயின் மடியில் குழந்தை போல

          திருப்தியாய் உள்ளேன்

            கலக்கம் எனக்கில்லையே

            கவலை எனக்கில்லையே

 

                        நற்செயல்கள் செய்ய

                        தேவையானதெல்லாம்

                        மிகுதியாய்த் தந்திடுவார்

 

1.         யேகோவா தேவன் தாயானார்

            இன்றும் என்றும் பெலன் ஆனார்

            பால் அருந்தும் குழந்தை போல

            பேரமைதியாய் உள்ளேன்

 

                        கலக்கம் எனக்கில்லையே

                        கவலை எனக்கில்லையே

 

2.         எந்த நிலையிலும் எப்போதும்

            தேவையானதெல்லாம் தருவார்

            ஊழியம் செய்ய போதுமான

            செல்வம் தந்து நடத்திடுவார் - கலக்கம்

 

3.         கீழ்மையாக விடமாட்டார்

            மேன்மையாகவே வாழச் செய்வார்

            கடன் வாங்காமல் வாழச் செய்வார்

            கொடுத்துக் கொடுத்து பெருகச் செய்வார்

 

4.         ஏற்ற காலத்தில் மழை பெய்யும்

            கையின் கிரியைக்கு பலன் உண்டு

            கர்த்தரே தனது கருவூலமாம்

            பரலோகம் திறந்தார் எனக்காக

 

5.         நீதிமான் பாதை நண்பகல் வரைக்கும்

            அதிகதிகமாய் பிரகாசிக்கும்

            சூரிய பிரகாசம் போலிருக்கும்

            ஊழியம் வளரும் நிச்சயமாய்

 

 

https://www.youtube.com/watch?v=o936CIo3XOg

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...