25 April 2024

துதி உமக்கே இயேசு நாதா

துதி உமக்கே இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதி உமக்கே இயேசு நாதா

                        வாழ்த்திடுவோம் உம்மையே

                        நித்தமும் காக்கும் உம் கிருபைகளையே

                        எண்ணியே துதித்திடுவோம்

 

1.         ஆதி அந்தமில்லா அனாதி தேவனே

            அடைக்கலமானீர் எமக்கு நீரே

            மாறா விசுவாசத்தை எமக்கு தந்தீரே

            எண்ணியே துதித்திடுவோம்                  - துதி

 

2.         கடந்த நாளெல்லாம் வழுவாமல் எம்மை

            காருண்யத்தாலே காத்தீரே

            வல்ல தேவனே உம் வாக்குகளையே

            எண்ணியே துதித்திடுவோம்                  - துதி

 

3.         தாயினும் மேலாய் அன்பு கூர்ந்தீரே

            தந்தை போல் எம்மைச் சுமந்தீரே

            ஜீவனை தந்த உமது அன்பினையே

            எண்ணியே துதித்திடுவோம்                 - துதி

 

4.         ஜெயம் பெற்றோராய் சேவை செய்து

            ஜீவனை வைத்தே துதித்திடவே

            நித்திய ஜீவனை எமக்கு தந்தீரே

            எண்ணியே துதித்திடுவோம்                  - துதி

 

5.         உன்னதர் உந்தன் மகிமையைக் காண

            சீயோனை எமக்குக் காட்டினீரே

            இயேசுவே உந்தன் வருகையின் நாளை

            எண்ணியே துதித்திடுவோம்

 

 

https://www.youtube.com/watch?v=Mb_B23FFReQ

 

 

https://www.youtube.com/watch?v=dROcdE9ua-M

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...