துதி கீதமே பாடியே வாழ்த்தி வணங்கிடுவோம்

துதி கீதமே பாடியே வாழ்த்தி வணங்கிடுவோம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   துதி கீதமே பாடியேவாழ்த்தி வணங்கிடுவோம்

                   ஜோதியின் தேவனாம்

                        இயேசுவை பணிந்திடுவோம்

 

1.         பஞ்சைப் போல் வெண்மை ஆகிட

            பாவம் யாவும் நீங்கினதே

            சொந்த இரத்தம் சிந்தி நம்மை

            மீட்ட தேவனை துதித்திடுவோம்

 

2.         தந்தை போல் எம்மை தாங்கியே

            தோளில் ஏந்தி சுமந்தனரே

            சேதம் ஏதும் அணுகிடாமல்

            காத்த தேவனை துதித்திடுவோம்

 

3.         காரிருள் போன்ற வேளையில்

            பாரில் நம்மை தேற்றினாரே

            நம்பினோரை தாங்கும் தேவன்

            இன்றும் என்றுமாய் துதித்திடுவோம்

 

4.         கட்டுகள் யாவும் அறுத்துமே

            கண்ணீர் கவலை அகற்றினாரே

            துதியின் ஆடை அருளி செய்த

            தேவ தேவனை துதித்திடுவோம்

 

5.         வானத்தில் இயேசு தோன்றிடுவார்

            ஆயத்தமாகி ஏகிடுவோம்

            அன்பர் இயேசு சாயல் அடைந்து

            என்றும் மகிழ்ந்தே வாழ்ந்திடுவோம்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு