30 April 2024

என்னைக் கண்டவரே என் நிலையை அறிந்தவரே

என்னைக் கண்டவரே என் நிலையை அறிந்தவரே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    என்னைக் கண்டவரே என் நிலையை அறிந்தவரே (2)

                        பெலவீனன் எந்தன் நிலையை அறிந்து உதவிட வருபவரே

                        படுகுழியில் நான் கிடந்தாலும் என்னைத் தூக்கிட வருபவரே

                        பரலோகம் என்னைக்கொண்டு சேர்ப்பவரே - 2

 

1.         ஆதியிலே வார்த்தையினால் உலகைப் படைத்தவரே

            அழிந்திடும் என் வாழ்க்கையையும் சிருஷ்டிக்க நினைப்பவரே - 2

            ஆறுதல் தேறுதலும் அள்ளித்தருபவரே

            ஆறாத காயங்களை ஆற்றிதருபவரே - 2

            ஆதியும் அந்தமும் ஆனவரே (2) - என்னைக்

 

2.         நம்பிக்கை இல்லையென்றால் நம்பிக்கை தருபவரே

            விசுவாசம் இல்லையைன்றால் துவக்கி முடிப்பவரே - 2

            வேதனை சோதனையில் கூடவே வருபரே

            இருளின் தனிமையிலும் ஒளியாய் வருபவரே - 2

            அல்பாவும் ஒமேகாவும் ஆனவரே – 2

 

3.         கேடான உலகினிலே அன்பை விதைப்பவரே

            தவறினவன் விலகினவன் என்று ஒதுக்கிட மறுப்பவரே - 2

            தொலைந்திட்ட காசானாலும் தேடி எடுப்பவரே

            தொலைந்திட்ட ஆடானாலும் தோளில் சுமப்பவரே - 2

            கெட்டகுமாரனையும் மீட்டவரே வஸ்திரமும் மோதிரமும் தருபவரே - என்னைக்

 

 

- MARIA RAMESH

 

 

https://www.youtube.com/watch?v=t-Zv820RbIw

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்   

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...