23 April 2024

விளையச் செய்யும் இயேசுவாலே எல்லாமே ஆகும்

விளையச் செய்யும் இயேசுவாலே எல்லாமே ஆகும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                        விளையச்செய்வாரே (2)

 

          விளையச் செய்யும் இயேசுவாலே எல்லாமே ஆகும்

            கனியச்செய்யும் கர்த்தராலே எல்லாமே கனியும் - 2

 

                        வறண்ட நிலங்கள் மகிழ்ச்சியாகும்

                        புஷ்பங்கள் எல்லாம் பூத்துக்குலுங்கும்

                        தளர்ந்த கரங்கள் திடமாய் மாறும்

                        தள்ளாடும் கால்கள் பெலனாய் மாறும் - 2

 

                        ஜீவிப்பது நான் அல்லவே கிறிஸ்துவே ஜீவிக்கிறார் (2)

                        ஹால்லேலூயா ஹால்லேலூயா (2)

 

1.         சந்தன மரங்கள் போலவே வாசனையோடு வளருவேன்

            கேதுரு மரங்கள் போலவே ஓங்கியே வளருவேன்

            கருவாய் என்னை விதைத்தவர் உருவம் தந்து வளர்த்தினார்

            நாவில் சொல்லைத் தந்தவர் நாளும் பகலும் உயர்த்தினார் - வறண்ட

 

2.         வெண்கலக் கதவுகள் உடையுமே பொருளும் உனக்காய் சேருமே

            நல்ல காரியம் நடக்குமே இழந்த உன் ஆசி திரும்புமே

            கேட்ட உன் ஞானம் விளையுமே கேளாத ஆசிர் கூடுமே

            சாத்தான் விதைத்தது நிற்காதே வளரும் உங்கள் சரீரமே - வறண்ட

 

3.         வானத்தின் பலகணி திறக்குமே களஞ்சியம் எங்கும் நிரம்புமே

            விளைந்த உன் அறுவடை நிலைக்குமே கையிடும் காரியம் வாய்க்குமே

            கடன்களும் மறைந்து போகுமே சுகம் தரும் நதிகளும் ஓடுமே

            கர்த்தர் கட்டளை நிற்குமே அவர் சொன்ன காரியம் நடக்குமே - வறண்ட

 

- Apostle Dr. Jawahar Samuel & Dr. Daniel Jawahar

 

https://www.youtube.com/watch?v=vSS7khFGsao

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...