திவ்விய வாசகன் பாருங்கள்
101. இராகம்: துசாவந்தி. தாளம்: ஆதி.
பரிசுத்த யோவான் சுவி திருநாள் - திசம்பர் 27ஆம் நாள்
“புத்தியாய் நடந்து வாருங்கள்” - என்ற மெட்டு
பல்லவி
திவ்விய
வாசகன் பாருங்கள்
- யோவான் மூப்பன்
திருநாள்
தொழுதிட வாருங்கள்.
அனுபல்லவி
ஒவ்விய மனமும்
வாக்கும் ஒழுக்க
வணக்க மாக்கும்
செவ்விய செப தேயுவின்
செல்லப்பிள்ளை
தானாக்கும்
- திவ்விய
சரணங்கள்
1. ஏகோவா கிருபை
யுள்ளவர்
- ஆக இருந்தார்
இந்தப்
பேர ருத்த
முள்ளவன்
வாகான பெத்
சா யிதா
வின் - வலையுடன்
வள்ளமுந் தள்ளியே வந்தவன்
தாகமுடன் இயேசு
குரு நாதனுக்குப்
பணிவிடை
வேக
முடன் செய்த
தாயும் சாலோமி
என்னப்படுவாள்
- திவ்விய
2. இயேசு
நச ரேயன்
கூப்பிடத்
- தடை யின்றி
எழுந்த
வரைப் பின்
சென்றிட
நேசமுடன்
அன்பு கூர்ந்திட
- நெடுகிலும்
நிஷ் களங்க
சிநேக மூடிட
பாசமில்லாச்
சமாரியர்
பக்தி செய்யா
திருந்ததால்
ஆசையோடே வான்
நெருப்பால் அழிக்க
வரங் கேட்டவன்
- திவ்விய
3. இடிமுழக்க
மைந்த னென்றுமே - இதினாலே
இட்ட
பேரும் நின்ற தென்றுமே
படியிலொரு
புதிய சீடன் - அற்புதங்கள்
பாங்குடனே
செய்தவுடன்
நொடியி லேசு நாமம்
சொல்ல நோகப்
பேசித் தடுத்திட்டான்
முடிவிலே நம்
இரட்சகரும்
மூப்பனுக்குப்
புத்தி சொன்னார்
- திவ்விய
4. சத்திய
யோவானும்
பேதுரும்
- சற் குரு வுடன்
சகல
நாளுமே சதுரும்
முக்கிய
சமய மனைத்தும்
- ஒன்றாகவே
முதன்
மையுடனே நினைத்தோம்
புத்தியாய்
ஆயத்தம் பஸ்கா,
போதக அன்னாவின்
மனை,
எத்தியே கல்லறை
பார்க்க, இருவரும்
ஓடினார்கள் - திவ்விய
5. ஆண்டவன்
சிலுவை யடியில்
- யோவான் நிற்க
அன்னை
மரி தாயு
மாகினள்
மாண் டெழுந்த
தேவ சுதனார்
- மறுபடியும்
வந்து
வந்து காட்சி யளித்தார்
நீண்ட
காலம் தானிருந்து
நேர்த்தியாய்ச்
சபைகள் நாட்டிப்
பூண்டிடும்
கிறிஸ்து
அன்பில் பூரிப்பாய்ப்
பனுவல் செய்தான்
- திவ்விய
6. நாலாம் சுவி சேஷ
முழுதும் - சோதியின்
கதிர்
ஞானப்
பிர காச
வெளிச்சம்
மேலான
நிருப மனைத்தும்
- சவ வார்த்தை
வேதாந்த சித்தாந்த
போதகம்
பூலோகம்
வானமும் போக, புதிய
சிருட்டி
யாக
காலம்
வரு முன்னே
தீர்க்கன்
காட்டினன்
வெளிப்படுத்தல்
- திவ்விய
7. தேவனால்
பிறந்த வரைத்
தான் - எவன் அறிவான்?
தேவனால்
பிறந்தோன்
அறிவான்
பாவ
பாசமுள்ள மனுடன்
- யோவான் முனியைப்
பத்மு தீவில்
சிறை யாக்கினான்
ஆசியாவி லுற்ற சபை ஏழையும்
நிலைப்படுத்தி
அந்த
எருசலேம்
நகர் அழிவையும்
பார்த்துக் கொண்டான்
- திவ்விய
8. பூரண
வயது நூறில்
- சாயுச்சியமாம்
புண்ணிய
நித்திரை
யூரில்
ஆரணக் கிழவன்
மரிக்க - அனந்தம் சபை
அன்புடன்
அதை விசாரிக்க
மாரண வேதம்
போதிக்க மக்களும்
மனங் கொதிக்க
மந்திரம்
நிறைந்த மனப்
பக்தியுடன் முத்தி சேர்ந்தான்
- திவ்விய
- S. உவால்டர்
கவிராயர்,
தென்மலை.
Comments
Post a Comment