24 April 2024

உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்

உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          உம்மை ஆராதிப்பதை என் வாழ்வில்

            எதுவும் தடை செய்வதில்லை

            உம் துதியை என் வாழ்விலிருந்து

            எதுவுமே பிரிப்பதில்லை

 

                         அல்லேலூயா அல்லேலூயா

                         அல்லேலூயா அல்லேலூயா

 

1.         தேவனே நீர் எல்லாம் செய்ய வல்லவர்

            நீர் செய்ய நினைத்ததை தடுப்பவர் எவருமில்லை

            எனது காலங்கள் உந்தன் கரத்தில்

            உம் சித்தம்போல் என்னை நடத்திடுவீர்

 

2.         சிங்கக் குட்டிகள் பட்டினி கிடந்தாலும்

            உம்மைத் தேடுவோர்க்கு குறையென்பதில்லையையா

            நல்லவர் நீரே என்று அறிந்தேன்

            இயேசுவே உம் அன்பை நான் ருசித்தேன்

 

3.         உமது கிருபையால் சேனைக்குள் பாய்ந்திடுவேன்

            உமது பெலத்தினால் மதிலையும் தாண்டிடுவேன்

            எதுவும் என்னை ஜெயிப்பதில்லை

            என் மீட்பர் உயிரோடு இருப்பதினால்

 

- Pr. R. Reegan Gomez

 

 

https://www.youtube.com/watch?v=Edx2Q5qLFYQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...