26 April 2024

துதி பலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

துதி பலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          துதி பலிய செலுத்த வந்தோம் இயேசய்யா

          உம்மை ஆராதிக்க கூடி வந்தோம் இயேசய்யா

 

                        நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர் - இந்த

                        உலகை ஆளும் தெய்வம் நீரே

 

1.         என்னிலே ஒன்றுமில்லை ஆனாலும் நேசித்தீரே (2)

            என்னிலே நன்மையில்லை ஆனாலும் உயர்த்தினீரே (2)

            தகப்பனை போல என்னை சுமந்தீரையா

            ஒரு தாயை போல என்னை தேற்றினீரே - 2

            சுமந்தீரய்யா தேற்றினீரே

            சுமந்தீரய்யா என்னை தேற்றினீரே

 

                        ஆராதனை உமக்கே ஐயா எங்கள்

                        ஆராதனை உமக்கே ஐயா

 

                        ஆராதனை (8)

                        எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை (2)

                        ஆராதனை உமக்கே ஐயா எங்கள்

                        ஆராதனை உமக்கே ஐயா

 

2.         பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன் (2)

            ஒரு கண்ணும் என் மேல் இரக்கமாய் இருந்ததில்லை (2)

            பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே

            உம் மகனாகவே ஏற்றுக் கொண்டீர் - 2

            பிழைக்க செய்தீர் ஏற்றுக் கொண்டீர்

            பிழைக்க செய்தீர் என்னை ஏற்றுக் கொண்டீர்  

 

3.         உமது இரக்கத்திற்கு முடிவே இல்லையப்பா (2)

            உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா (2)

            உமது காருண்யம் என்னை பெரியவனாய்

            உயரத்திலே நிறுத்தியதே - 2

            உமது காருண்யம் என்னை பெரியவனாய் (2)

            உயரத்திலே நிறுத்தியதே

            என்னை உயரத்திலே நிறுத்தியதே

 

- Pastor. Lucas Sekar

 

https://www.youtube.com/watch?v=v3gMHUpaoxU

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...