24 April 2024

திறக்கப்பட்ட ஒரு ஊற்று

திறக்கப்பட்ட ஒரு ஊற்று

(Eb-Min / 4/4 / T:111)

 

                    திறக்கப்பட்ட ஒரு ஊற்று

                        சிலுவையில் இருந்து பாய்கின்றதே

                        பாவத்தின் அழுக்கையும் கழுவ

                        ஆறாக என்றும் பாய்கிறதே

 

1.         மூழ்க நீ ஓடிவா

            கழுவ நீயும் விரைந்து வா (2)

            சிவப்பை போன்ற உந்தன் பாவம்

            தூய வெண்மையும் ஆகிடுமே (2)

 

2.         பாவத்தின் சம்பளம் மரணம்

            பாவம் உன்னை பின்தொடரும் (2)

            பாவத்தின் பாரச்சுமை அகற்ற

            சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க

 

3.         பாவங்கள் உன்னை பிரித்திடும்

            கர்த்தரின் முகத்தை மறைத்திடும் (2)

            பாவத்தின் கிரியைகள் அழிந்திட

            சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க

 

4.         பாவங்கள் சாபமாய் மாறிடும்

            (உன்) சந்ததி சாபத்தால் அழிந்திடும் (2)

            சாபத்தின் கட்டுகள் உடைந்திட

            சிலுவையண்டை வருவாயா? (2) - மூழ்க

 

 

- Pastor David

 

 

https://www.youtube.com/watch?v=CtiLrSd3nJk

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...