திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
(D-Maj /
4/4 / T:136)
திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்
கர்த்தர் உன்னை கட்டிடுவாரே -
2
சூழ்நிலைகள் பாராதே
சோர்ந்து நீயும் போகாதே
இல்லாதவை இருப்பவைபோல்
அழைக்கும் தேவனை விசுவாசி - நீ (2)
1. விழுந்துபோன உந்தன் வீட்டை
திரும்பவும் எடுத்து கட்டிடுவார் -
2
உந்தன் சமாதானம் பெருகச்செய்து
சுகமாய் வாழச் செய்திடுவார் -
2
சுகமாய் வாழச் செய்திடுவார்
- திரும்ப
2. இழந்து போன உந்தன் பெலனை
திரும்பவும் உனக்கு தந்திடுவார் -
2
உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்து
கொழுத்த கன்றாக வளரச்செய்வார் -
2
கொழுத்த கன்றாக வளரச்செய்வார்
- திரும்ப
3. மங்கி போன உந்தன் விளக்கை
திரும்பவும் எரியச் செய்திடுவார் -
2
உந்தன் தலையை நிமிரச்செய்து
உனக்கு நியாயம் செய்திடுவார்
- 2
உனக்கு நியாயம் செய்திடுவார்
- திரும்ப
- Pastor. David
https://www.youtube.com/watch?v=ZVGZn-mRJsk
Comments
Post a Comment