தினம் தினம் பாடும் என் மனம் தேவன் உன் வரவே
தினம் தினம்
பாடும் என் மனம்
தேவன் உன் வரவே
தீவினைகள்
தீர்த்தவனே
தன்னை பலியாக
தந்திட வந்த
மன்னவனே
என் உள்ளம்
இசை பொழியும்
- தமிழும்
எழில்
நடம் புரியும்
1. ஏழு ஸ்வரம் ஏசு நாதனே தந்தாய்
என்ன சுகம்
அதில் மூழ்கிடச்
செய்தாய் - 2
எண்ணில்லா
ராகங்கள்
நிதம் கொடுத்தாய்
(2)
உன்னைப்
பாடும் பாடலில்
வாழ வைத்தாய்
காலைக்
கதிர்களின் மஞ்சள்
வெயில் சுகம்
கற்பனையல்ல
உன் கோலம்
மாலை
மயங்கிடும்
வேளை வரும் மதி
மாயவன்
உன் திரு ஜாலம்
- 2
விந்தை
நீ செய்த இந்த
மண் பார்க்க
வந்தாயோ
வந்துன்னைத்
தந்தாயோ சரிகபதச - தினம்
தினம்
2. பாலையில்
பாய்கின்ற நதியென வந்தாய்
சூளைக்குள்
செங்கமல பூ
மலர்ந்தாய்
- 2
நாலுக்குள்
இரண்டொடுங்கும்
நயம் கொடுத்தாய்
(2)
நான் உன்னைப்
பாட நல் தமிழ்
கொடுத்தாய்
நாளொரு
பாடலும் பொழுதொரு
ராகமும்
நாத
லயங்களும்
தந்தாய்
யாழொடு
தாள நடையொடு
நான் ஒரு
யாகம்
நடத்த மகிழ்வாய்
- 2
மோகனம்
பாடி தோரணம் போட்டு
மன்னா நீ
வந்ததால் பாடுவேன்
- சரிகபதச -
தினம்
https://www.youtube.com/watch?v=VInWKA4Trmc
Comments
Post a Comment