20 April 2024

திருநெல்வேலி திருமண்டலம் பெண்கள் ஐக்கிய சங்கம்

திருநெல்வேலி திருமண்டலம் பெண்கள் ஐக்கிய சங்கம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

1.       திருநெல்வேலி திருமண்டலம் பெண்கள் ஐக்கிய சங்கம்

            ஜெபம் ஐக்கியம் சேவையுடன் வளர்ந்து வரும்சங்கம்

 

2.         அலங்காரப் பந்தலிலே அலை திரளும் பெண்கள்

            அகிலம் படைத்த ஆண்டவர் நீர் எழுந்தருள வேண்டும்.

 

3.         பேராயர் தலைமையிலே ஆயர்களின் கூட்டம்

            பேராயர் அம்மாவுடன் பெண்மணிகளின் கூட்டம்

 

4.         ஆறு நல்ல சபை மன்றத்தின் அருமையான பெண்கள்

            ஆண்டவரின் புகழ்பாடும் அழகு நிறைந்த பெண்கள்

 

5.         பரமன்புகழ் பாடிவரும் பார்வதியாபுரம் பெண்கள்

            பரிசுத்த அலங்காரமாய் பாளையங்கோட்டை பெண்கள்

 

6.         சீயோன் குமாரத்திகள் சீவலசமுத்திரம் பெண்கள்

            தூயோரைப் பாடிவரும் தேவர்குளம் பெண்கள்

 

7.         ஊற்றண்டை கனிகொடுக்கும் ஊத்துமலை பெண்கள்

            நேயமாக உதவி செய்யும் வி.கே.புரம் பெண்கள்

 

8.         இட்டமுடன் வழங்கி வரும் மடத்துப்பட்டி பெண்கள்

            நாட்டமுடன் கலந்துகொள்ளும் நாஞ்சான்குளம் பெண்கள்

 

9.         பொதியமலை சாரலிலே புகழ்மிகும் தென்காசி

            போதகர்கள் நிறைந்திருக்கும் கமழும் மணக்காடு

 

10.       மேல இலந்தைக் குளம் மேன்மை பெற்ற பெண்கள்

            வருகையிலே விருதுபெறும் வளர்ச்சியுறு பெண்கள்

 

11.       இனிமையான இசைபாடும் இடையன்குடி பெண்கள்

            சகலத்தையும் ஈந்தளிக்கும் சங்கரன்கோவில் பெண்கள்

 

12.       ஆண்டவரைப் போற்றுகின்ற ஆலங்குளம் பெண்கள்

            குலவணிகர்புரத்து நல்ல கூடிவரும் பெண்கள்

 

13.       நூற்றுமுப்பது சேகரமும் பல்லாண்டு வாழ்க

            பெயர்சொல்ல இயலாது பெருமை பெற்று வாழ்க

 

14.       ஊழியோடு நீடூழி ஊழி சதாகாலம்

            வாழியே மிக வாழியே பெண்கள் ஐக்கிய சங்கம்

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...