08 April 2024

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்

                        தாழ்த்தப்பட்டோரை துக்குகிறீர் - 2

                        தகப்பனே தந்தையே

                        உமக்குத் தான் ஆராதனை - 2 - தடுக்கி

1.         போற்றுதலுக்குரிய பெரியவரே

            துயவர் துயவரே - 2

            எல்லாருக்கும் நன்மை செய்பவரே

            இரக்கம் மிகுந்தவரே - 2

            உம் நாமம் உயரணுமே

            அது உலகெங்கும் பரவணுமே - தகப்பனே


2.         உம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்

            அருகில் இருக்கின்றீர் - 2

            கூப்பிடுதல் கேட்டு குறை நீக்குவீர்

            விருப்பம் நிறைவேற்றுவீர் - 2

            உம் நாமம் உயரணுமே

            அது உலகெங்கும் பரவணுமே - தகப்பனே

3.         உயிரினங்கள் எல்லாம் உம்மைத்தானே

            நோக்கிப் பார்க்கின்றன - 2

            ஏற்றவேளையில் உணவளித்து

            ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர் - 2

            உம் நாமம் உயரணுமே

            அது உலகெங்கும் பரவணுமே - தகப்பனே

4.         அன்பு கூரும் எங்களை அரவணைத்து

            அதிசயம் செய்கின்றீர் - 2

            பற்றிக் கொண்ட யாவரையும் பாதுகாத்து

            பரலோகம் கூட்டிச் செல்வீர் - 2

            உம் நாமம் உயரணுமே

            அது உலகெங்கும் பரவணுமே - தகப்பனே

5.         உம் அரசின் மகிமை மாட்சிதனை

            அறிவித்து மகிழ்ந்திடுவேன் - 2

            உம் வல்ல செயல்கள் அனைத்தையுமே

            தியானித்து துதித்திடுவேன் - 2
            உம் நாமம் உயரணுமே

            அது உலகெங்கும் பரவணுமே - தகப்பனே

 

https://www.youtube.com/watch?v=oTeIX9VU1To

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...