சிலுவை மட்டும் உம்மை தாழ்த்தீனீர்
சிங்காசனம் வரை என்னை உயர்த்தினீர் -
2
சுயநலமில்லா சிலுவையின் அன்பு
கல் மனம் கரைத்திடுதே -
2
1. முள்முடி சிரசினில் சூடியே
உம்மையே தரித்திரராக்கினீர் -
2
எந்தன் சாபம் எல்லாம் நீக்கி
என்னை உயர்த்தினீரே -
2
2. பாடுகள் நீர் எனக்காய் சகித்து
உம்
இரத்தம் எல்லாம் நீர் சிந்தினீர் -
2
எந்தன் பாவம் எல்லாம் போக்கி
என்னை இரட்சித்தீரே -
2
3. சிலுவையை நீர் எனக்காய் சுமந்து
தழும்புகளை நீர் எனக்காய் தரித்தீர் -
2
என் பலவீனம் எல்லாம் மாற்றி
என்னை வாழ்வித்தீரே -
2
https://www.youtube.com/watch?v=Aa1AKJmUhAI
No comments:
Post a Comment