கல்வாரி
சிலுவையிலே
தொங்கின
என் இயேசுவே
என் பாவத்தின்
பலியாக
உம் ஜீவனைத் தந்தீரே
அல்லேலூயா
அல்லேலூயா
அல்லேலூயா
ஆமென்
1. இரத்தத்
துளிகள் வேர்வையாய்
தெறிக்க
பாவி எனக்காய்
ஜெபித்தீரே
உம்மை மறுதலித்தேன்
பின்வாங்கிப்போனேன்
மனங்கசந்து
நான் அழுகின்றேன்
2. பாரசிலுவை
தோளினில்
சுமந்து
கொல்கொதா
நீர் சென்றீரே
என் பாரங்களை என்
வியாதிகளை
கோர சிலுவையில்
சுமந்தீரே
3. கால்கள்
கரங்களில் ஆணிகள்
அறைய
உந்தன்
இதயத்தில் ஈட்டி
பாய
இரத்தம்
வெள்ளமாக
புரண்டோடிடுதே
என் உள்ளமும்
உருகிடுதே
4. கல்மனம்
கொண்ட பாவியாய்
வாழ்ந்தேன்
கனிவாய்
என்னை நேசித்தீரே
என் பாவங்களை
நான் அறிக்கையிட்டேன்
என் வாழ்வினை
அர்ப்பணித்தேன்
https://www.youtube.com/watch?v=vpQ3oIID3Mg
No comments:
Post a Comment