10 December 2025

வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே

வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   வனாந்திரம் வயல்வெளியாகும் நேரமே

                        வெட்டாந்தரை நீர்த் தடாகமாக மாறுமே

                        வயல்வெளி காடாக எண்ணப்படுமே

                        பின்மாரியில் ஆறுகளும் பாய்ந்தோடுமே

 

1.         வறண்ட நிலமும் மகிழ்ந்து பாடும்

            காடு வெளி களித்து செழிக்கும்

            லீபனோனின் மகிமை வருமே

            கர்மேல் சாரோன் அழகு பெறுமே

 

2.         தளர்ந்த கைகளை திடப்படுத்தி

            தள்ளாடும் கால்களை பெலப்படுத்தி

            திடன் கொள்ளுங்கள் என்று சொல்லுவோம்

            பதில் அளிக்க தேவன் வருவார்

 

3.         குருடர்களின் கண்கள் காணுமே

            செவிடர்களின் செவிகள் கேட்குமே

            முடவன் மானைப் போல துள்ளுவான்

            ஊமையன் நாவும் பாடுமே

 

4.         மீட்கப்பட்டவர் பாடல் கேட்குமே

            நித்திய மகிழ்ச்சி தலை மேல் தங்குமே

            சஞ்சலம் தவிப்பும் ஓடிப் போகுமே

            ஆசீர்வாத மழை பொழியுமே

 

 

- Late Dr. Justin Prabhakaran

 

 

YouTube Link

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...