உன்னைக்
கண்டழைக்கும்
இயேசுவை
மறந்து
நீ எங்கே போகிறாய்
- 2
காணாமல்
போன ஆட்டை
தேடிடும்
மேய்ப்பனைப் போல
கருத்தாய்
இன்றுன்னை தேடி
அவர்
அழைக்கிறார்
(2) - உன்னைக்
1. கண்டால்
சிலுவையில் தொங்கும்
குருதி
வடிந்தவர் காட்சி
- 2
கல்லான
உள்ளங்கள் உடையும்
கண்ணீரும்
கண்களில் வடியும்
கனிவாய்
உன்னை அழைப்பவரை
நோக்கிப்பார்
(2) - உன்னைக்
2. பாலான புவி
இன்பம் கண்டு
பாய்ந்தோடி
நீ அழியாதே - 2
பூலோக சுகங்கள்
மாயை
புவி வாழும்
வாழ்வெல்லாம்
துன்பம்
பரலோக இன்ப
இயேசுவை நீ
நாடுவாய்
(2) - உன்னைக்
- சாராள்
நவரோஜி
https://www.youtube.com/watch?v=byDgmfRFVjM
No comments:
Post a Comment