01 April 2024

எக்காளத் தொனியோடு இயேசு

எக்காளத் தொனியோடு இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          எக்காளத் தொனியோடு

            இயேசு மேகத்தில் வந்திடுவார் (2)

                        அந்நிய கண்கள் அல்ல என் கண்களே

                        அன்பின் இயேசுவை கண்டு பூரிக்கும் (2) - 2

 

1.         வானாதி வானங்களின் வழியே

            வேந்தன் கிறிஸ்து வந்திறங்க - 2

            பரிசுத்தவான்களை அன்போடு அணைத்து

            பரலோகம் சேர்த்துக் கொள்வார் - நம்மை

            பரலோகம் சேர்த்துக் கொள்வார். - எக்காளத்

 

2.         லோத்தின் மனைவிப்போல் மாறாமல்

            லோகத்தை திரும்பிப் பாராமல் - 2

            பரலோக பயணம் பரதீஸி நோக்கி

            புறப்பட ஆயத்தமா - நாம்

            புறப்பட ஆயத்தமா - எக்காளத்

 

3.         வீசிடும் விண்ணொளி வழி காட்டும்

            காசினியை கடந்து செல்வோம் - 2

            நேசிக்கும் இயேசுவை எதிர்கொண்டு சேர்வோம்

            மாசில்லா பொன் நகரம் - நாம்

            மாசில்லா பொன் நகரம்

 

 

- சாராள் நவரோஜி

 

 

https://www.youtube.com/watch?v=Pm88IVa0Ip4

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...