01 April 2024

என்னை ஆளும் இயேசு நாதா

என்னை ஆளும் இயேசு நாதா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

            என்னை ஆளும் இயேசு நாதா

            எந்தன் ஆவி ஆத்மா சரீரம்

                        ஜீவ பலியாய் ஒப்படைத்தேன்

                        ஜெயம் தந்தாட்கொள்ளும் - 2

 

1.         அதிகாலைத் தோறும் என்னை எழுப்பி

            அறிவை ஊட்டி நிறப்புவீர்

                        இளைத்தவருக்கு ஏற்ற சமயம்

                        இனிய வாக்கைத் தந்தருளும் - 2 - என்னை

 

2.         நீரோடைகளை வாஞ்சிக்கும் மான்போல்

            நித்தம் என் ஆத்மா கதறுதே

            வரண்டு விடாய்த்த என் இதயத்தில்

            வற்றாத ஊற்றாய் பாய்ந்திடுவீர் - 2 - என்னை

 

3.         சமாதானத்தின் தேவன் இவரோ - நீர்

            சத்திய வாக்கு தவறிடீர்

            விரைந்து பறந்து கர்த்தரைக் காண

            விசுவாசத்தோடு தைரியம் கொள்வேன் - 2 - என்னை

 

- சாராள் நவரோஜி

 

https://www.youtube.com/watch?v=aDid9_pRqvQ

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...