10 April 2024

தம் பாலர்களோடு மாநகர்

தம் பாலர்களோடு மாநகர்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                             'When mothers of Salem'

 

          தம் பாலர்களோடு

            மாநகர் சாலேம் தாய்மார்

            சேர்ந்தொன்றாய் வரச் சீஷர்கள்

            போய்விடச் சொன்னாரே!

            நல்மீட்பர் அதைப் பார்த்தனர்,

            தயாளத்தோடு கூறினர்

            சிறியோரை என்னண்டை சேரவிடும்.

 

2.         இப்பாலரை ஏந்தி

            மார்போடணைத்துச் சேர்த்து

            என் ஆட்டுக்குட்டி ஆக்குவேன்

            நீர் தடுக்கவேண்டாம்

            தம் நெஞ்சை எனக்கொப்பித்தார்

            என்னோடு மகிழ்ந்திருப்பார்

            சிறியோரை என்னண்டை சேரவிடும்

 

3.         அச்சிறுவர் மீதில்

            மாபாசம் காட்டினாரே;

            அவ்வன்பை இன்னும் அறியார்

            மாதிரள் பாலர்கள்:

            வேதோபதேசம் உணரார்

            இவ்வருள் வாக்கை அறியார்

            சிறியோரை என்னண்டை சேரவிடும்.

 

4.         இத்தேசத்துப் பாலர்

            பேரன்பைக் கேட்பாராக.

            நீர் சொன்ன படி யாவரும்

            மெய்யொளி காணட்டும்

            உம் அருள் ஜோதி வீசிடும்,

            தெய்வன்பை நன்றாய்க் காட்டிடும்

            சிறியோரை உம்மண்டை சேர்த்தருளும்.

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...