தம்புரானே இயேசுநாதா

தம்புரானே இயேசுநாதா பொன்னுகாந்தா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

279.

 

                             கண்ணிகள்

 

1.       தம்புரானே இயேசுநாதா பொன்னுகாந்தா - எந்தன்

          சங்கடங்க ளென்றழியுஞ் சொல்ல வேணும்

 

2.         கட்ட நட்ட மக்கட்குண்டென்றப்பன் சொன்னது - போல்

            அட்ட  திக்குந் தினந்தினங் கண்டு கொண்டோம்

 

3.         தாயிழந்த கோழிக்குஞ்சின் தன்மை போன்றோம் - நாதா

            பாரிலெங்கள் சங்கடங்கள் பார்க்க வேணும்

 

4.         சாடிப்பயந் தோடுமானின் குட்டி போல - நாங்கள்

            காடுமலை குன்றிலேறி ஓடுகின்றோம்

 

5.         கூடிழந்த கோழிபோல் திகிலடைந்து - நாங்கள்

            வாடி நொந்து மாற்றார்நடு வாழுகின்றோம்

 

6.         நூறுநூறாய் சூழ்ந்துநின்று ஊறு செய்யும் - பகை

            நாசமெண்ணில் காவலர்பொன் னேசு மாத்ரம்.

 

7.         ஆழிதனில் வீழ்ந்தமிழும் பட்சி போல - நாங்கள்

            வீழ்கின்றோமே சிற்றின்பமாம் செங்கடலில்

 

8.         ஆகாரின்பு தல்வன் போல்இப் பாழ்வ னத்தில் - நாளும்

            காதலனே வாழவோ யாம் கண்ணீர் சிந்தி?

 

9.         இன்பமெனும் பரதிசில் சென்று வாழ - எங்கள்

            துன்பமிந்த மேதினியி லென்று மாறும்?

 

10.       சொர்க்கசீயோன் நகரத்தில் நாத ரோடு - விரைவில்

            சேர்ந்துவாழும் நித்தியபாக்யம் நல்கிடுமே

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு