04 April 2024

சஞ்சலத்தை விட்டொழிந்து ஜீவிப்போம்

சஞ்சலத்தை விட்டொழிந்து ஜீவிப்போம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   சஞ்சலத்தை விட்டொழிந்து ஜீவிப்போம்

                        சாட்சியாக இயேசு நம்மை நடத்துவார்

                        மகிழ்ச்சியாக காலை மாலை கடத்துவோம்

                        காரிருளில் நேசர் நம்மை நடத்துவார்

 

1.         ஜீவியத்தில் பல பல பாடுண்டு

            வாழ்க்கை மீது வெறுப்பு தோன்றும் வழியுண்டு

            அனுதினமும் நேசரை நாம் வழிபட்டு

            சாத்தான் மீது வெற்றி கண்டு போற்றிட்டு

 

2.         கர்த்தர் நம்மை மீட்டதாலே மகிழுவோம்

            கல்வாரியில் மரித்ததாலே போற்றுவோம்

            அவர் இரத்தத்தில் நம்மை முற்றும் கழுவுவோம்

            ஸ்தோத்திரங்கள் பாடி ஏத்திப் புகழுவோம்

 

3.         அனுதினமும் அவர் நம்மை நடத்துவார்

            கரம் பிடித்து கைவிடாமல் நடத்துவார்

            பள்ளத்தாக்கில் விழுந்திடாமல் நடத்துவார்

            அமர்ந்த தண்ணீர் அண்டையிலே சேர்ப்பிப்பார்

 

4.         அல்லேலூயா பாடல் பாடி போற்றுவோம்           

            ஆதி தேவன் பாதம் போற்றி புகழுவோம்

            இரட்சிப்பின் நற் செய்திக்காகத் துதிப்போம்

            இராஜனாக வருவதாலே பாடுவோம்

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...