ஞான சுவிசேடமே நன்மை
144. இராகம்:
பிலகரி செம்படைதாளம்
பல்லவி
ஞான
சுவிசேஷமே
நன்மை
தரும் நேசமே
அனுபல்லவி
ஞான உபதேசமே, வளரும்
விசுவாசமே,
- ஞான
சரணங்கள்
1. சத்திய
வாக்கியமே, சந்தோச பாக்கியமே,
புத்தியா
ரோக்கியமே,
புண்ணிய சிலாக்கியமே.
- ஞான
2. நீதிப்
பிரசங்கமே,
நிமலன் அருள்
தங்கமே,
சோதிமிகும்
துங்கமே,[1] துதிபெருகும்
பொங்கமே,[2] - ஞான
3. அஞ்ஞானத்தை
அழிக்கும், அலகையிடர்
ஒழிக்கும்,
மெய்ஞ்ஞானத்தை
அளிக்கும், விளங்கி
என்றும் செழிக்கும்,
- ஞான
4. யேசுவண்டையில்
சேர்க்கும், எல்லா
இடரும் நீக்கும்,
பேசும்
பாவத்தைப்போக்கும்,
பேதைமையோரைக்
காக்கும் - ஞான
- ஜே. பால்மர்
Comments
Post a Comment