ஞான திரி முதலொரு பொருளை

ஞான திரி முதலொரு பொருளை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

324. இராகம்: தோடி                                ஆதி தாளம் (479)

 

                             பல்லவி

 

          ஞான திரி முதலொரு[1] பொருளை, நரர் சுகமொடு வர அருள்

          ஞான திரி முதலொரு பொருளே

 

                             அனுபல்லவி

 

            வானவர் துதிசெய் அனாதி குருபரனே, ரீரீரீ ரீ

            மானுவேல் ஏசெனும் நாம சங்கீதனே - ஞான

 

                             சரணங்கள்

 

1.         மாதுக் குரைத்த ஆதி வார்த்தையின் வித்தே

            மண்ணின் ஈசாயின் வேராய் வழுத்தும் விண் முத்தே,

            வேதப்ரமாணம் ஈந்த ஆறு லட்சண சித்தே;

            விளங்கும் திருச்சபையில் இலங்கும் அரூபவஸ்தே - ஞான

 

2.         நித்தம் விக்கனம்[2] வராமல் ரட்சித்த நன்னேசா,

            நெஞ்சில் கவலை, துயர் நீக்கும் சந்தோஷா,

            சத்துருப் பசாசின் முடிதரித்த உல்லாசா,

            சந்ததம் இச்சபையை ஆதரிப்பாய், சருவேசா - ஞான

 

3.         புவியில் அநேக நரர் போயினர் முன்மாண்டு,

            பூர்த்தியாய்க் காப்பாற்றி வைத்தீர் புகுத இவ்வாண்டு,

            திவ்ய திருச்சபையோ சிறிய கடுகுப் பூண்டு

            திரண்ட மரம்போலாகிச் செழிக்கவும் நீண்டு - ஞான

 

4.         தின முன தருள் புரி சீயோன் அனுகூலா

            தேசிகர் உளம் களிக்கச் சிறக்கும் நன்னூலா;

            மன நலம் தரும் ஒரு பரகுரு பாலா

            வருட முதலில் புது வரமருள், சீலா[3] - ஞான

 

­- ஈசாக்கு பாக்கியநாதன்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்



[1] இறைவன்

[2] துன்பம்

[3] மேன்மை பொருந்தியவனே

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு